Editorial / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்
மூதூர் பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டின் கீழ் புனரமைப்புச் செய்யப்பட்ட மூதூர், அக்கரைச்சேனை ரேஞ்சஸ் சன சமூக நிலையக் கட்டடத் திறப்பு விழா, இன்று (30) நடைபெற்றது.
ரேஞ்சஸ் சன சமூக நிலையத் தலைவர் ஏ.ஜே.அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மூதூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அருஸ் கலந்துகொண்டார்.
இன்போது, தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் 65 பேருக்கு தேவையான இலவசக் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.நஜாத், பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம்.வஃஜித், ரெஞ்ஜஸ் விளையாட்டுக் கழகச் செயலாளர் ஏ.எம்.கபீல் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
5 minute ago
10 minute ago
13 minute ago
14 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
13 minute ago
14 minute ago