Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
ஒலுமுதீன் கியாஸ் / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா நகர சபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளின் நடமாற்றத்தை கட்டுப்படுத்தத் தவறும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, கிண்ணியா நகரசபை அறிவித்துள்ளது.
கட்டாக்காலி கால்நடைகளின் தொல்லைகள் குறித்து இன்று (3) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே, கிண்ணியா நகரசபைச் செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“கட்டாக்காலி கால்நடைகளால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாகவும், விபத்துகளுக்கு காரணமாக அமைவதாகவும், தொடர்ச்சியாக எமக்கு முறைப்பாடுகள் வந்தவண்ணம் உள்ளன.
“இந்த முறைப்பாடுகளை கவனத்திலெடுத்து கால்நடை உரிமையாளர்கள் தங்களது கால் நடைகளை பிரதான வீதியிலோ, அல்லது பொது இடங்களிலோ விடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
“இது சம்பந்தமாக பல தடவை அறிவித்திருந்தும் இதுவரை எவரும் அது தொடர்பாக கவனத்தில் எடுக்கவில்லை.
“எனவே, இது சம்பந்தமாக இன்று இறுதி பொது அறிவித்தல் 2017.12.03 நகர சபையால் விடுக்கப்படுகின்றது. இதன் பிறகு எமது அறிவித்தலை புறக்கணிக்கும் உரிமையாளர்களுக்கு எதிராக உள்ளூராட்சி சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உங்களின் கவனத்துக்கு அறியத்தருகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, கால் நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளை கட்டுப்படுத்துமாறும் அல்லது அதற்குரிய மாற்று ஒழுங்குகளைச் செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago