அப்துல்சலாம் யாசீம் / 2020 ஜனவரி 29 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கள ஆற்றுப் பகுதியில் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற சந்தேகநபரை, நேற்று (28) இரவு கைது செய்துள்ளதாக, சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், மங்கலவெவ பகுதியைச் சேர்ந்த ஹேவா கலுகம்லாகே அஜித் உபெந்து குமார (42 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சேருநுவர பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, காட்டுப் பகுதியில் மறைந்திருந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதாகவும் சந்தேகநபர், வேட்டையாடுவதை தொழிலாக கொண்டவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் முன் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த சேருநுவர பொலிஸார், மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .