2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கட்டுத்துவக்கு வெடித்து ஒருவர் பலி

அப்துல்சலாம் யாசீம்   / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில், கட்டுத்துவக்கு வெடித்ததில், சந்தன குமார (30 வயது)  என்பவர், இன்று (22) உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

தேன் எடுப்பதற்காக மூன்று பேர் சென்றபோது, கட்டுத்துவக்கு வெடித்துப் படுகாயமடைந்த நிலையில், காட்டிலிருந்து பிரதான வீதிக்குக் கொண்டு வந்து 1990 அம்பியூலன்ஸ்  சேவையின் உதவியுடன், திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, வழியில் அவர் உயிரிழந்துள்ளாரென, ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X