எப். முபாரக் / 2019 பெப்ரவரி 04 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, நிலாவெளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கட்டுத்துவக்கு ஒன்றை வைத்திருந்த நபரொருவரை, இம்மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.அன்பாஸ் உத்தரவிட்டார்.
கோணேசபுரி, சாம்பல்தீவுப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், கட்டுத்துவக்கைக் கொண்டு மிருகங்களை வேட்டையாடுவதாகவும் வயலுக்குக் காவலுக்குக் கொண்டு செல்லுவதாகவும் தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டாரென, நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் வீட்டைச் சோதனை மேற்கொண்ட போது, வீட்டில் கூரைப் பகுதியிலிருந்து கட்டுத்துவக்கு கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .