Janu / 2026 ஜனவரி 27 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலையில் திங்கட்கிழமை (26) அன்று முதல் காணாமல் போயிருந்த 17 வயதுடைய மாணவன் எம்.எல். முன்சித், கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில் நிட்டம்புவ பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி ஒருவரின் மகனான குறித்த மாணவன் பாடசாலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருந்தார்.
சமுத்திரகம பகுதியில் குறித்த மாணவனின் சைக்கிள் மற்றும் புத்தகப்பை மீட்கப்பட்டதுடன் பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் கடத்தல் காரர்களிடமிருந்து தந்திரமாகத் தப்பித்த மாணவன், அடி காயங்களுடன் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்புத் தேடி சரணடைந்துள்ளார்.
நிட்டம்புவ பொலிஸார் வழங்கிய தகவலையடுத்து பெற்றோர் தற்போது மாணவனைப் பார்ப்பதற்காக விரைந்துள்ளனர்.
மாணவன் கடத்தப்பட்டதற்கான காரணம் மற்றும் கடத்தல்காரர்கள் குறித்த மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ மற்றும் திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அ . அச்சுதன்

3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago