2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கண்காணிப்பரை தாக்கிய நால்வருக்கு விளக்கமறியல்

எப். முபாரக்   / 2020 ஜனவரி 28 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை தனியார் பஸ் நிலையத்தில் நேரம் கண்காணிப்பரைத் தாக்கிக் காயப்படுத்திய நால்வரை, பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

திருகோணமலை - மகாமாயபுர பகுதியைச் சேர்ந்த 39, 48, 31, 21 வயதுடைய நால்வரே, நேற்று (27)  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடமையில் இருந்த நேரம் கண்காணிப்பாளரை, குறித்த சந்தேகநபர்கள் மதுபோதையில் தாக்கிக் காயப்படுத்தியதாக, சந்தேகநபர்களுக்கெதிராக மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய, பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தாக்குதலுக்குள்ளான நேரம் கண்காணிப்பாளர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .