2026 மார்ச் 19, வியாழக்கிழமை

கத்திக் குத்தில் இருவர் காயம்

தீஷான் அஹமட்   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனைச்சேனை பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, மூதூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இச்சம்பவம், நேற்றுச் சனிக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மூதூர், மனைச்சேனை பகுதியில் உள்ள உள் வீதியூடாக இருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாகப் பயணித்துள்ளார். இவ்வாறு வேகமாக செல்ல வேண்டாமென, வீதியில் நின்ற சிலர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கும் வீதியில் நின்றவர்களுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் வீட்டுக்குச் சென்று கத்தியை எடுத்து வந்து வீதியில் நின்ற இருவரைக் குத்தியுள்ளனர்.

இதனையடுத்து, கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த இருவரையும் பிரதேச மக்கள், மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்ததாகத் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .