Princiya Dixci / 2022 மே 17 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைதாகிய 15க்கும் மேற்பட்டோருக்கு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் பிணை வழங்கியுள்ளார்.
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வீடுகரள சேதமாக்கியமை தொடர்பில் பொலிஸாரால் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டு, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை, பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று (16) ஆஜர்படுத்திய போதே, பிணை வழங்கி நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபர்களுக்காக கந்தளாய் சட்டத்தரணிகள் சங்கம் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
21 Dec 2025