Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 24 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பெரும்போக வேளாண்மை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக, எதிர்வரும் திங்கட்கிழமை (27), கந்தளாய் குளத்திலிருந்து பத்து நாட்களுக்கு நீர் திறந்து வைக்கப்படவுள்ளதாக, கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் குளத்தை நம்பி வான்எல, முள்ளிப்பொத்தானை, பேராறு மற்றும் பழைய வாய்க்கால் போன்ற பகுதிகளில் வேளாண்மை செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பிரதேசங்களில் பெரும்பாலான ஏக்கர்களில் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பேராறு, வான்எல போன்ற பகுதிகளில் இன்னமும் வேளாண்மை செய்கைகள் நீர் இல்லாததால் மேற்கொள்ளப்படவில்லை.
இதனைக் கருத்திற்கொண்டே பத்து நாட்களுக்கு நீர் திறந்து வைக்கப்படவுள்ளதாக, கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
8 hours ago
9 hours ago