Suganthini Ratnam / 2016 ஜனவரி 31 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, நாமல்வத்த காட்டுப்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஒருவர் கரடியின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூதூரைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இப்ராஹீம் அப்துல்லாஹ் (வயது 39) என்பரே கரடியின் தாக்குதலுக்குள்ளானார்.
கூலிக்காக மாடுகளை மேய்க்கும் இவர், வழமை போன்று இன்றையதினம் காலையிலும் மாடுகளை மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்கு மாடுகளுடன் சென்றுகொண்டிருந்தபோதே கரடியின் தாக்குதலுக்குள்ளானார்.
இவரின் முகத்தில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக மகாதிவுள்வெவ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
11 minute ago
27 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago
1 hours ago
2 hours ago