2025 மே 19, திங்கட்கிழமை

கரடித் தாக்குதலில் வயோதிபர் படுகாயம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, மொறவெவ காட்டுப் பிரதேசத்துக்கு தேன் எடுக்கச்சென்ற போது, கரடித் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த வயோதிபரொருவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதலில், பன்குளம் 04ஆம் கண்டத்தைச் சேர்ந்த கே.முருகையா (64 வயது) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

கரடி முகத்தில் பாய்ந்து  ஒரு  கண்ணை தோண்டியதுடன் கால் பகுதியையும் கடித்துள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மொறவெவ குளத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக மூன்று பேர் சென்ற போது, ஒவ்வொருவரும் காட்டுக்குள் பிரிந்து சென்று தேடிக்கொண்டிருந்தபோது, விழுந்து கிடந்த முதிரை மரமொன்றில் தேன் கிடந்ததாகவும் அதனை எடுக்க முற்பட்டபோது, மரத்துக்கு அருகில் உறங்கிக்கொண்டிருந்த கரடி முகத்தில் பாய்ந்ததாகவும் பாதிக்கப்பட்ட வயோதிபர் தெரிவித்தார்.

மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X