2025 மே 03, சனிக்கிழமை

கர்ப்பிணிகள் அசௌகரியம்

தீஷான் அஹமட்   / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோப்பூரைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துணவுப் பொதிகளை, தோப்பூரிலேயே வைத்து வழங்க, மூதூர் பிரதேச செயலகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, தோப்பூர் பிரதேச கர்ப்பிணித் தாய்மார்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தோப்பூரைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்கள், அரசாங்கத்தால் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் சத்துணவுப் பொதிகளைப் பெறுவதற்கு 15 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள மூதூருக்கு பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் செல்ல வேண்டியுள்ளது.

தோப்பூரில் இருந்து மூதூருக்கான பஸ் போக்குவரத்துக் குறைவாகக் காணப்படுவதால் முச்சக்கர வண்டிக்கு 800 ரூபாய் கொடுத்து, மூதூருக்குப் பெரும் செலவுகளுக்கு மத்தியில் செல்ல வேண்டியுள்ளதாகவும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இது விடயத்தில் மூதூர் பிரதேச செயலாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X