2025 மே 23, வெள்ளிக்கிழமை

கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

மூதூர் கமநலச் சேவை நிலைய அதிகார எல்லைக்குட்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிகளுக்கு அரச காணி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் மூதூர் பிராந்திய நிலையத்தால் இன்று புதன்கிழமை மூதூர் கமநலச் சேவை நிலையத்தின்  கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது.

அரச காணி சம்பந்தமான அடிப்படை சட்டங்களின் ஏற்பாடுகளின் படி காணி அனுமதிப்பத்திரங்கள் பெறுவது தொடர்பான நடைமுறைகள், தற்போதுள்ள குறைபாடன காணி அனுமதிப்பத்திரங்களை  வலிதானதாக மாற்றும் வழிமுறைகள், அரச காணிகள் தொடர்பாக எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை குறைப்பதற்காக செய்யப்படும் பின்னுரித்தாளர்கள் நியமனம் உள்ளிட்டவை தொடர்பில் தெளிவூட்டப்பட்டன.

இந்தக் கருத்தரங்கில்; கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கையில், 'பரம்பரையாக தங்களால் பயிரிடப்பட்டு யுத்த சூழ்நிலையால் கைவிடப்பட்ட விவசாயக் காணிகளை தற்போது பண்படுத்தச் செல்லும்போது வனப் பாதுகாப்பு பிரிவினர், காட்டு இலாகா காணிக்குள் அத்துமீறியதாக கூறி வழக்கிட்டு வருவதாக கூறினார்கள்.  மூதூர் 15ஆம் வாய்க்கால் எனும் பகுதியில் அமைந்துள்ள விவசாய காணிகள் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களால் நீண்ட காலமாக பயிரிடப்பட்டதாகவும் தற்போது வனப் பாதுகாப்பு திணைக்களம் அக்காணிக்குள் தங்களை செல்லவிடாது தடுத்து பெரும்பான்;மை இனத்தைச் சேர்;ந்தவர்கள் மணல் சேகரிக்கும் இடமாக மாற்றி வருவதாக கருத்து வெளியிட்டனர். மேலும் இறால்குழி கங்கை பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள காணியும் பரம்பரை பரம்பரையாக பயிரிடப்பட்ட காணி என்றும் அதனை வனப்பாதுகாப்பு திணைக்களம் ஆக்கிரமித்துள்ளதாகவும் அதனை மீட்டுத்தர சட்ட உதவி ஆணைக்குழு உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X