Suganthini Ratnam / 2015 நவம்பர் 17 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
திருகோணமலை மாவட்டத்தில் வட்டார எல்லைகள் பிரிக்கப்பட்டு அதற்குரிய உறுப்பினர்கள் எத்தனை என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைபாடுகள் காணப்பட்டால் அதனை ஆராய்ந்து இம்மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு உள்ளூராட்சி மாகாணசபை அமைச்சர் பைஸர் முஸ்தபா சகல மாவட்ட செயலகங்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், மூதூர் பிரதேசத்தினுடைய சனத் தொகைக்கும் அதனுடைய நிலப்பரப்பையும் அடிப்படையாக வைத்து பார்க்கும்போது, மூதூர் பிரதேசத்திற்கு ஒதுக்கிய ஆசனங்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றது.
இது சம்மந்தமாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த கல்விமான்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பள்ளிபரிபாலன சபை உறுப்பினர்கள், இளைஞர் அமைப்புக்கள், சங்கங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகளுக்கும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நாளை புதன்கிழமை மாலை 4 மணிக்கு தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் இடம் பெறவுள்ளது. இதில் சகலரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் றினூஸ் மரைக்காயர் தெரிவித்தார்.
32 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago