Editorial / 2019 ஜனவரி 08 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்
விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்த கல்வி அமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்வதாக, ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
இந்த நியமனத்துக்கான அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்த பின் நடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விளையாட்டு பயிற்றுவிப்பாளர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டதில் இருந்து அமைச்சரவை அனுமதி கிடைக்கும் வரை தான் தொடர்ச்சியாக விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், கல்வி அமைச்சருடன் தொடர்பில் இருந்தவன் என்ற வகையில் இருபக்கத்திலும் இந்த நியமனத்தை பெறவும் வழங்கவும் மேற்கொண்ட முயற்சிகளையும் கஷ்டங்களையும் நன்கறிந்தவன் என்ற ரீதியிலும், இன்று இந்த நியமனத்துக்கான அனுமதி கிடைத்திருப்பதையிட்டு, தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நேர்முகத்தேர்வு முடிந்து தெரிவு செய்யப்பட்ட பயிற்றுவிப்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டபின், சிலரின் அரசியல் நிகழ்ச்சி நிரலால் நியமனம் வழங்க தாமதமானபோது கல்வி அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராக தான் கல்வி அமைச்சருடன் இணைந்து இந்நியமனத்தை வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாகவும் அதில் தெரிவித்தார்.
மேலும் இன்று பல்வேறு முயற்சிகளின் பின் இந்நியமனத்துக்கான அமைச்சரவை அனுமதி பெற்று நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் குறித்த அறிக்கையின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
17 minute ago
23 minute ago
28 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
23 minute ago
28 minute ago
56 minute ago