Niroshini / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
அனுமதிப்பத்திரமின்றி கள்ளச்சாராயம் வைத்திருந்த இருவருக்கு மூதூர் நீதிமன்ற நீதிபதி ஐ.எம்.றிஸ்வான் இன்று வியாழக்கிழமை முறையே மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய், எட்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
தோப்பூர் வீரமா நகரம்,பள்ளிக்குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த நபர்களுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, மூதூர் பிரதேசங்களில் அனுமதிப்பத்திரமின்றி கள்ளச்சாராயம் வைத்திருந்த குறித்த இருவர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே தோப்பூர் வீரமா நகரைச் சேர்ந்த ஒருவருக்கு மூவாயிரத்து ஐந்நூறு ரூபாயும் பள்ளிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கு எட்டாயிரம் ரூபாயும் அபராதம் விதித்ததுடன் தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் ஆறுமாத கால சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026