2025 மே 02, வெள்ளிக்கிழமை

கழுத்து வெட்டிக் கொலை: இளைஞனின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் தங்கத்துரை  தனுஷ் எனும் 20 வயது இளைஞனைக் கழுத்து வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இளைஞனின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான வழக்கு, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில், நேற்று (28) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்படி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இது இலங்கை மாத்திரமில்லாமல் உலக மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்றக் கொலையெனக் கூறி, குறித்த பிணை விண்ணப்பத்தை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மேலும், இந்தக் கொலைச் சம்பவம் பற்றி ஒரு சரியான அணுகுமுறையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு, சட்டமா அதிபர் திணைக்களத்துக்குப் பணித்ததோடு, இவ்வாறான கொலைக்குற்றச்சாட்டுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமெனவும் நீதிபதி பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.  

இந்தச் சம்பவத்தின் போது உயிரிழந்த இளைஞன், தன்னை வைத்தியசாலையில் சேர்ப்பிக்குமாறு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஓட்டோ சாரதியொருவரிடம் உதவி கோரிய போது, அச்சாரதி அங்கிருந்த ஓடிய காணொளி, சமூகவலைத்தளங்களில் வைரலாகியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .