Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஜூன் 14 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
மணல் அகழ்வுக்காக அனுமதி வழங்கும் அரசாங்கம் அதனைக் கண்காணிக்கத் தவறுவதன் காரணமாக அதில் முறைகேடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் தெரிவித்தார்.
இதனால் அனுமதிக்கு மேலதிகமான மணல் அகழப்பட்டு, இயற்கை வளம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது, பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
திருகோணமலை, இலுப்பைக்குளம் மற்றும் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்றுவரும் மண் அகழ்வை மறு அறிவித்தல்வரை நிறுத்துமாறு, கடந்த 11ஆம் திகதியன்று அங்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த மாவட்டச் செயலாளர் பணித்திருந்தார்.
எனினும், மாவட்டச் செயலாளரின் உத்தரவையும் மீறி, மறுநாளே அப்பகுதிகளில் மணல் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தியை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர், மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றார். இதனை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுப்பதோடு, மணல் அகழ்வுகளுக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை சம்பந்தப்பட்ட இடங்களையும் பார்வையிட்டு, மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
5 hours ago
8 hours ago
19 Sep 2025
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
19 Sep 2025
19 Sep 2025