Editorial / 2019 மே 02 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தினுள், இன்று (02) அதிகாலை உட்புகுந்தக் காட்டு யானைகள், பயன்தரும் தென்னை, வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளன.
பகல் வேளையில் தோப்பூர் அல்லைக்குளத்தில் நிற்கும் யானைகள், இரவு, அதிகாலை வேளைகளில் ஊருக்குள் நுழைந்து, பயன்தரு மரங்களை சேதப்படுத்திச் செல்வதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இவ்விடயம் குறித்து, உரிய தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு, சேதம் விளைவிக்கும் யானைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .