2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

காட்டு யானைத் தாக்கியதில் ஒருவர் பலி

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம் , ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு பகுதியில் நேற்றுமுன்தினமிரவு  காட்டு யானைத்  தாக்குதலினால் ஆறு பிள்ளைகளின் தந்தையொருவர்  உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக  கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொலடர்பாக  கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கையில் ,  உயிரிழந்தவர் கிண்ணியா-உப்பாறு - மயிலபெஞ் சேனை பகுதியைச் சேர்ந்த   முஹம்மது பஜூர்தீன் ( 56 வயது) எனவும் இவர்,

தனது வீட்டிலிருந்து பைசல் நகர் பகுதியிலுள்ள மகளின் வீட்டிற்கு துவிச்சக்கரவண்டியில் வருகை தந்திருந்த போது, வீதியின் குறுக்கே வந்த காட்டுயானை தாக்கியதால்  அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .