Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 01 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, ஹொரவ்பொத்தாயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனவிழுந்தான் பகுதியில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர், நேற்றிரவு (31) உயிரிழந்துள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரவ்பொத்தான-அற்றாவ பகுதியைச் சேர்ந்த, அப்துல் ஹலீம் மொஹமட் அஸ்வர் (29வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர், ஆனவிழுந்தான் பிரதான வீதியின் ஊடாக அவரது சக நண்பருடன் மோட்டார் சைக்கிளில், தனது தோட்டத்துக்குக் காவலுக்காகச் சென்றுகொண்டிருந்தபோதே, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்,
உடனடியாக அவர், கபுகொல்லாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று தெரியவருகிறது.
உயிரிழந்தவரின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக, கபுகொல்லாவ பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
36 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
44 minute ago