2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

‘காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான சரியான பதில் இல்லை’

தீஷான் அஹமட்   / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு, அரசாங்கத்தால் இதுவரை சரியான பதில் வழங்கப்படாமலுள்ளதாக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ண சிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், நாடாளுமன்ற உறுப்பினரை, விழுது ஆற்றல் மேம்பாட்டு மய்யத்தின் அனுசரணையில், திருகோணமலை - லோட்டஸ் பாக் விடுதியில், நேற்று முன்தினம்  (31) சந்தித்துக் கலந்துரையாடி, தமது கோரிக்கை அடங்கிய மகஜரைக் கையளித்தனர்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி விடயமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாளை (03) ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் இதன்போது வழங்கப்பட்ட மகஜரை, ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதாகவும், எம்.பி தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக, தாங்கள், நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் பேசி வருவதாகவும் ஆனால், அதற்கான தீர்வு இன்னும் கிடைக்காமல் இருப்பதையிட்டு கவலையடையதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு நாடும் இன்று அபிவிருத்தி பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, நமது நாட்டில் மாத்திரம் தாய் - தந்தையர்கள், உறவுகள், தமது பிள்ளைகளைப் பறி கொடுத்துவிட்டு, அதற்காக வீதியில் நின்று போராட்டம் நடத்தும் நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நீங்கள் உங்களுக்கு நீதி கிடைக்கும்வரை போராட்டங்களை நடத்துங்கள் அதற்காக எங்களால் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்குவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X