Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 டிசெம்பர் 11 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உப்புவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணி விற்பனையில் மோசடி செய்த குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் ஒருவரை, பேஸ்புக் ஊடாக அடையாளங் கண்டு, நேற்று (10) இரவு கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளை, கொங்கிகொட பகுதியைச் சேர்ந்த தேவா கொஸ்வத்தகே தரங்க பிரசாத் குணசேகர (40 வயது) என்பவரை, காணியொன்று இருப்பதாக திருகோணமலை வரவழைத்து, அரசுக்குச் சொந்தமான காணியை காண்பித்துவிட்டு, 06 இலட்சத்தி 50 ஆயிரம் முற்பணம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அப்பணத்தை எடுத்து வருமாறு கூறியதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பணத்தைக் காரில் கொண்டு வந்த போது, காரிலிருந்து அப்பணத்தைக் களவாடி சென்றுள்ளதாகவும், களவாடியவர் பற்றிய விவரங்கள் தெரியாது எனவும் பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
இம்முறைப்பாட்டையடுத்து, உப்புவெளி பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி எச்.எம்.எஸ்.ஆர்.கே.ஹேரத்தின் முயற்சியால் அப்பணத்தைத் திருடிய சந்தேகநபர் குறித்து, பேஸ்புக் ஊடாக முறைப்பாட்டாளருக்கு சந்தேகநபரின் புகைப்படம் காண்பிக்கப்பட்டு, மோசடி செய்த இளைஞன், அடையாளங் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விசாரணை செய்தபோது, மேற்படி பணத்தைத் திருடியதாகவும், அதை தனது நண்பரிடம் கொடுத்துள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதேநேரம் மேற்படி நண்பன், பணத்தையும் கொடுத்துவிட்டு தலைமறைவாகியுள்ளாரென, ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான இளைஞனை, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago