2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

‘கிண்ணியாவில் இலவச பாடநூல்கள் வழங்கப்படவில்லை’

ஏ.எம்.ஏ.பரீத்   / 2019 ஜனவரி 23 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவசப் பாடநூல்களில் பல கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுப் பாடசாலைகளில் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லையெனப் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

சில வகுப்பு மாணவர்களுக்கு ஒரு சில பாடநூல்களே வழங்கப்பட்டுள்ளன எனவும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் ஏனைய பாடநூல்கள் வழங்கப்படவில்லை எனவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இதனால் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதாகத் தெரிவிக்கும் பெற்றோர், அனைத்து மாணவர்களுக்கும் முழுமையாகப் பாடநூல்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு, கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X