Freelancer / 2022 ஜூலை 08 , பி.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
தற்போதைய பொருளாதார நெருக்கடி தலை தூக்கியுள்ள நிலையில் எரிபொருளை பெற்றுக் கொள்ள மக்கள் மிக நீண்ட வரிசையில் அலை மோதுகின்றனர்.
திருகோணமலை- மட்டக்களப்பு வீதியில் உள்ள கிண்ணியா தோனா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு சுமார் 5 நாட்களின் பின்னர் நேற்று (07) மாலை டீசல் கிடைக்கப் பெற்றது.
பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு டீசல் விநியோகம் இடம் பெற்றதுடன், பெற்றோலுக்கான மிக நீண்ட வரிசை கடந்த மூன்று நாட்களாக இரவு பகலாக காணப்பட்ட போதிலும் பெற்றோல் குறித்த எரிபொருள் நிலையத்துக்கு வரவில்லை. விமானப் படையின் பலத்த பாதுகாப்புடன் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் இதன் போது ஈடுபட்டிருந்தனர்.

பெற்றோல் பவுசர் மூலமாக அண்ணளவாக ஒரு தடவைக்கு 6600 லீற்றர் கிடைக்கப் பெறுகிறது. இதனை 13000 லீற்றர் வரை மாற்றி கிடைக்கப் பெற்றால் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் விநியோகிக்க முடியும் என குறித்த ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முதலீட்டாளர் நேற்றைய டீசல் விநியோகத்தின் போது இதனை தெரிவித்தார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago