2025 மே 05, திங்கட்கிழமை

கிண்ணியாவில் கண்டன பிரேரணை

Princiya Dixci   / 2021 மே 12 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீட்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமையை கண்டித்து, கிண்ணியா நகர சபையில், மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் எம்.எம்.மஹ்தியினால் பிரேரனை கொண்டுவரப்பட்டு, சபையில் அப்பிரேரணை ஏகமானதாக  நிறைவேற்றப்பட்டது.

கிண்ணியா நகர சபையின் மே மாதத்துக்கான மாதாந்த சபை அமர்வு, தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில், நேற்று (11) நடைபெற்றது.

இதன்போது, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சபை உறுப்பினர்கள் கருப்பு நிற ஆடை மற்றும் கருப்புப் பட்டி அணிந்து, சுலோகங்களை ஏந்தியவாறு கண்டனப் பிரேரனையை நிறைவேற்றினார்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட சக கட்சி உறுப்பினர்களும் கண்டனப் பிரேரணைக்கு தங்களது ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரேரணையை முன்வைத்த  உறுப்பினர் எம்.எம்.மஹ்தி உரையாற்றுகையில்,

"அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைதானது, இந்த நாட்டு மக்ககளை மிகவும் வேதனைபடுத்தி இருப்பதோடு, ஜனநாயக முறையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் காணப்படுகின்றது.

“அதேபோன்று, பல முஸ்லிம் தலைவர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டு, இந்த நோன்பு காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமையானது மிகவும் வேதனையானது.

“இக் கைது நடவடிக்கைகளில் அநீதி இழைக்கப்பட்டுள்ளமை, பெரும்பான்மை சமூகத்தினாலும் தற்போது உணரப்பட்டுள்ளது என்பதை, ஊடகங்களூடாக அறியக்கூடியாதாக இருக்கின்றது.

“நாட்டில் ஜனநாயகம், சட்டவாட்சி, நீதித்துறையின் சுயாதீனம் நிலைநிறுத்தப்பட வேண்டும். இவ் விடயங்களில் ஜனாதிபதி, பிரதமர் கரிசனை காட்ட வேண்டும் எனக்  கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X