Editorial / 2020 ஏப்ரல் 01 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரச மற்றும் தனியார் இடங்களுக்கு, கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகள், நேற்று (31) முன்னெடுக்கப்பட்டன.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜீத் தலைமையில், கிருமி நாசினி தெளிக்கும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொவிட்19 எனும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் வைத்தியசாலை வாகனங்கள், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகள்,மதஸ்தளங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8 minute ago
15 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
19 minute ago
1 hours ago