Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
ஒலுமுதீன் கியாஸ் / 2018 நவம்பர் 29 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா, நகர சபை பிரதேசத்தில் 2018 இந்த வருடத்தில்டெங்கு நோய்யற்ற பாடசாலையாக மூன்று பாடசாலைகள் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், கிண்ணியா பெண்கள் மகா வித்தியாலயம் - முதலாமிடத்தையும், இஹ்ஸானியா மகளிர் வித்தியாலயம் - இரண்டாம் இடத்தையும், அல் ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் - மூன்றாடம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.
அதேவேளை, டெங்கு நோயின் ஆபத்து குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பாடசாலை மாணவர்களுக்கிடையில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் இஹ்ஸானியா மகளிர் வித்தியாலயம் முதலாம் - மூன்றாம் இடங்களையும் அல் ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
இவர்களுக்கான பணப் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கும் வைபவம் இன்று(29) பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம். அஜீத் தலைமையில், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வி. கயல்விழி, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர், கிண்ணியா நகரசபைத் தலைவர், கிண்ணியா பிரதேச கடற்படைத் தளபதி ஆகியோர் அதீதியாகக் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
36 minute ago
49 minute ago
1 hours ago