Princiya Dixci / 2021 ஜூலை 29 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியாவின் புதிய பிரதேச செயலாளராக எம்.ஏ.அனஸ், நேற்று (28) தனது கடமையை உத்தியோகபூர்வமாக கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து பொறுப்பேற்றார்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச் சேர்ந்த இவர், திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபராகவும் (காணி) கடமையாற்றியுள்ளார்.
இதற்கு முன் கடமையாற்றிய எம்.எச்.எம். கனி, வெருகல் பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்தே, புதிய பிரதேச செயலாளராக எம்.ஏ. அனஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், இதற்கு முன்னரும் கிண்ணியா பிரதேச செயலாளராக 2014.05.03 முதல் 2018.10.23 வரை கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
9 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026