2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணியா துப்பாக்கிச்சூடு; மூவர் கைது

Freelancer   / 2022 மார்ச் 09 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா – நடுஊற்று பகுதியில் நேற்று (07) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா - சூரங்கல் பகுதியைச் சேர்ந்த பீர் முகம்மது முகம்மது முஜீப் (30 வயது), மட்டக்களப்பு விமானப்படை முகாமில் கடமையாற்றி வருபவர் எனவும், இவர் கடந்த 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன் கிண்ணியா- முனைச்சேனை பகுதியைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையில் சாரதியாக கடமையாற்றி வரும் நூர் முஹம்மது ரபீக் (34 வயது) மற்றும் ஹமீது லெப்பை ஹசுறுல்லா (42 வயது) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட T56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய 09 ரவைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

நடுஊற்று பகுதியிலுள்ள களப்புக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கைப்பற்றப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கி சூட்டில் கிண்ணியா-குட்டி கராச்சி பகுதியை சேர்ந்த தாஜிது முகமது வசீம் (30 வயது), சாகுல் ஹமீது முகம்மது ரமீஸ் (33வயது) ஆகிய இருவரும் காயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X