Editorial / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப்பாலம் கவிழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிண்ணியா நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். நளீமுக்கு நாளை (10) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இவ்வுத்தரவை நீதவான் வழங்கினார்.
தனது கட்சிக்காரர் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனை கருத்திற்கொண்டு அவருக்குப் பிணை வழங்குமாறும், கிண்ணியா நகர சபைத் தலைவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், இது தொடர்பான வழக்கை இன்று வரை ஒத்திவைத்த நீதவான், சந்தேகநபரின் விளக்கமறியலை நாளை (10) வரை நீடிப்பதாக உத்தரவிட்டார்.
இதேவேளை, குறித்த அனர்த்தம் தொடர்பில் படகின் உரிமையாளர் மற்றும் அதனை இயக்கிய இருவர் ஆகிய மூன்று சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் டிசெம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடிக்கும் உத்தரவு, நேற்று (08) வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
57 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
5 hours ago