Editorial / 2019 மார்ச் 13 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, கிண்ணியா பிரதேசத்தில் சுற்றுலா நீதிமன்றம் ஒன்றை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரும் தீர்மானம், திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தில், நேற்று (12) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக, அச்சங்கத்தின் செயலாளார் சட்டத்தரணி சாஹீர் தெரிவித்தார்.
யுத்த காலத்துக்கு முன்னர், கிண்ணியாவில் சுற்றுலா நீதிமன்றம் இயங்கி வந்தது. எனினும், யுத்தத்துக்குப் பின்னர் சில நீதிமன்றங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும் கிண்ணியா நீதிமன்றம் ஆரம்பிக்கப்படவில்லை.
இதன் காரணமாக, மக்கள் தமது அலுவல்களை நிறைவேற்றிக் கொள்வதில் பலத்த சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, கிண்ணியா சுற்றுலா நீதிமன்றை ஆரம்பிக்க மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் தமது பூரண ஆதரவை வழங்கி, இதனைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரும் தீர்மானம், திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி சட்டத்தரணி சுபாஷினி சித்தரவேல் தலைமையில் கூடி, ஏகாமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .