2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணியா மீன் சந்தையை நவீன மயப்படுத்தி தருமாறு கோரிக்கை

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஒக்டோபர் 06 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா மீன் சந்தையை நவீனமயப்படுத்தித் தருமாறு மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள மீன் சந்தை கடந்த பல வருட காலமாகத் திருத்தப்படாமல் இருப்பதாகவும் இது குறித்து நகரசபைக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மீன் வியாபாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா மீன் வியாபாரிகள் நலன்புரிச் சங்கத்தால் நகரசபைக்கு பல கடிதங்களும் பல கோரிக்கைகளும் வழங்கப்பட்டிருந்த போதிலும் ஒரு வருடத்துக்கு  56 இலட்சம் அறவிடப்பட்டு வருவதாகவும் மீன் வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 நகரத்தின் பிரதான வீதியில் காணப்படுகின்ற மிக முக்கியமான மீன் சந்தை இதுவாகும்.

இந்த மீன் சந்தை, எதுவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கொட்டில்களில் காணப்படுவதாகவும் இதனை நவீன மயப்படுத்தி தருமாறும் மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த சந்தையை  நம்பி, 20 மீன் வியாபாரிகள் தொழில் புரிந்து வருவதாகவும்  பல தடவைகள் நகர சபையிடம் கோரிக்கை விடுத்தும் இந்த வருடம் மாத்திரம் நான்கு தூண்கள் மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டு உள்ளதாகவும் மீன் வியாபாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே, கிண்ணியா நகர சபைக்குட்பட்ட மீன் சந்தையை உடனடியாக புனரமைத்து நவீன மயப்படுத்தி தருமாறு மீன்பிடி வியாபாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X