Editorial / 2021 நவம்பர் 04 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாங்குள விவசாயிகள், இன்று (04) கவனயீர்ப்பில் ஈடுபட்டார்கள்.
தங்களுக்கான பசளையை பெற்றுத் தரக் கோரி, பதாகைகளை ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கலந்து கொண்டார்.
“சொகுசு அறையில் இருந்து கொண்டு விவசாயிகளை ஏமாற்றாதே”, “உரத்தை தடுத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே”, “ விவசாயம் அழிவில், மக்கள் பட்டினியில், நாடு நெருக்கடியில், இதுவா உங்களது வளமான எதிர்காலம்?” , “வேண்டாம் வேண்டாம் சீனாவின் குப்பைகள் வேண்டாம், தா தா உரம் தா” போன்ற வாசகங்களை உள்ளடக்கியவாறு கோசங்களை விவசாயிகள் எழுப்பினர்.
53 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago
7 hours ago