2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கிழக்கில் ஒரு சந்திப்பு

Freelancer   / 2023 மே 22 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் சீனா - யுன்னான் மாகாண பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல், திருகோணமலையில் உள்ள  கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (21) நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில், யுன்னான் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இருதரப்பு வேலைத்திட்டம் தொடர்பாக  கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாண மக்களுக்கு மனிதாபிமான நிவாரணங்களையும் வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அதுகோரள, பிரதம செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஆகியோருடன் யுன்னான் ஆளுநர்  வாங் யூபோ, சீனத் தூதுவர்  மற்றும் அவர்களது பிரதிநிதிகள் தலைமையிலான குழுவினரகள் பங்கேற்றனர். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X