2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

‘கிழக்கில் டெல்டா இல்லை’

Princiya Dixci   / 2021 ஜூலை 08 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிழக்கு மாகாணத்தில் டெல்டா வைரஸ் எவருக்கும் பரவவில்லை என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக்  தெரிவித்தார்.

எனினும், கொவிட் - 19 வைரஸ்களைத்  தடுப்பதற்கான நடைமுறைகளை மக்கள் பேண வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

கிண்ணியா தள வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய நிலையில் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்படுவது குறைவாகவுள்ளது. எனவே மக்கள் கவனயீனமாக இருக்காமல் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி, இன்று (08)முதல் முன்னெடுக்கப்படுவதாகவும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் இதனை பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

“இதுவரைக்கும் தடுப்பு மருந்துகளை பெற்றவர்களில் எவருக்கும் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. எனவே, பயமில்லாமல்  தடுப்பு மருந்துகளைப் பெற்றுக் கொள்ளவும்.

எதிர்வரும் காலங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் முன்னிலை உத்தியோகத்தர்கள், சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X