2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கிழக்கு மாகாணத்தில் சீர்திருத்த பள்ளி அமைக்க நடவடிக்கை

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாணத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கிழக்கு மாகாண நன்னடத்தைத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ரிஸ்வானி  ரிபாஸ் தெரிவித்தார்.

சிறுவர் சீர்திருத்தப் பள்ளியை மட்டக்களப்பு மாவட்டத்தில் நாவற்குடா பகுதியில் அமைப்பதற்கு இடம் ஒதுக்கித் தருமாறு, கிழக்கு  மாகாண காணி ஆணையாளரிடம் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறுவர் சீர்திருத்த பள்ளி கிழக்கு மாகாணத்தில் இல்லாமையால் யாழ்ப்பாணம் - அச்சுவேலிப் பகுதிக்கு சிறார்களை அனுப்பி வைப்பதாகவும் இதனால் வறுமை கோட்டின் கீழ் வாழும் பெற்றோர்கள், சிறார்களைப் பார்வையிடுவதற்கு அதிகளவிலான பணத்தைச் செலவிடுவதும் சில சிறார்கள் பெற்றோர்கள் தூரத்தை கவனத்திற்கொண்டு அச்சுவேலி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு செல்லமுடியாமல் தொடர்ந்தும் சிறுவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த கட்டத்தை அமைப்பதற்கு நாவற்குடா பகுதியில் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்துக்குச் சொந்தமான காணியொன்றை வழங்குமாறும் காணி வழங்கப்பட்டவுடன்,  நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை, சிறுவர்களுக்கான உளவியல் விருத்தி அமைவிடம் இல்லாமையால் 14 - 18 வயது வரையிலான சிறுவர்களை, அநுராதபுரம் - கலாவெவ விஜிதபுர பகுதிக்கு அழைத்துச் சென்று தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்கி வருவதாக, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .