Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 02 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் புதிதாக அரச வங்கிகளின் கிளைகளும் ATM இயந்திரங்களும் ஆரம்பிக்கப்பட வேண்டுமென, திருகோணமலை ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், அமைச்சர் கபீர் காசிமிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வியாழக்கிழமை அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
யுத்தம் நிறைவுற்ற பின்னர் கிழக்கு மாகாண மக்களின் வங்கி பாவனை அதிகரித்துள்ளது. ஆனாலும், இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் போதியளவு வங்கிகள் இப்பகுதியில் இல்லை. இதனால் பொதுமக்கள் பல மணிநேரம் வங்கிகளில் காத்திருக்கவேண்டியுள்ளது.
அத்துடன், நகர்ப்புறங்களில் மட்டுமே வங்கிகள் காணப்படுவதால் கிராமப்புற மக்கள் வங்கி சேவையை பெற பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யவேண்டியுள்ளது.
மேலும் ATM இயந்திரங்களில் தினந்தோறும் நீண்ட வரிசையை அவதானிக்க முடிகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
எனவே, கிழக்குமாகாணத்தில் இனம்காணப்பட்ட பிரதேசங்களில் புதிய வங்கி கிளைகளையும் இயந்திரங்களையும் அமைக்க வேண்டும் என தெரிவித்தார் .
அத்துடன், புதிய வங்கிக் கிளைகள் அமைக்கப்பட இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்களின் உத்தேச திட்டத்தையும் அமைச்சரிடம் கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago
8 hours ago