2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் நியமனம்

Editorial   / 2022 ஜனவரி 03 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

கிழக்கு  மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளராக மூதூரைச் சேர்ந்த எம்.எம்.ஜவாத் (நளீமி) பதவியுயர்வு பெற்றுள்ளார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் I ஐ சேர்ந்த எம்.எம். ஜவாத், கிழக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளரால் 2021.12.31 திகதிய EP/3/1/B/PF/SLEAS/23 கடிதத்துக்கமைவாக 2022.01.01 அன்று முதல் செயற்படும் வண்ணம்  கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளாராக (APD) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இவர், கடந்த ஒரு வருட காலமாக கிழக்கு மாகாணத்தின் கல்வி திணைக்களத்தின் கல்வி தர நிர்ணயத்துக்கான மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளாராக செயற்பட்டுள்ளார்.

ஒரு சட்டத்தரணியான எம்.எம்.ஜவாத், மூதூர் தி/மு/அல்ஹிலால் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், ஜாமியா நளீமியா கலாபீடம்,  பேராதனை பல்கலைகழகம், களனி பல்கலைகழகம், இலங்கை திறந்த பல்கலைகழகம், மற்றும் தேசிய கல்வி நிருவகத்தில் (NIE) பல கற்கைநெறிகளிலும் தனது உயர் கல்வியை கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X