Editorial / 2019 ஏப்ரல் 30 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை குச்சவெளி பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர் ஒருவரை, எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, நேற்று (29) உத்தரவிட்டார்.
ஜாயா நகர், குச்சவெளி பகுதியைச் சேர்ந்த (வயது 41) ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேற்படி நபர், 2012 ஆம் ஆண்டிலிருந்து தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் தொடர்புகளை பேணிவந்துள்ளார் என்றும் குச்சவெளி பகுதிக்கு பொறுப்பாளராகச் செயற்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்தே, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரைக் கைதுசெய்யும் போது, தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் விடயங்கள் தொடர்பான ஆவணங்களுடன் மடிக்கணினியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .