Princiya Dixci / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீட்
நாட்டில் 5 ஆண்டுகளுக்குள் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வளங்கள் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
குடிநீர் பிரச்சினை தொடர்பிலான நடமாடும் சேவையொன்று, திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது 50 சதவீதமான குடிநீர்ப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய 50 சதவீதத்தை எதிர்வரும் 5 வருடத்துக்குள் பூர்த்தி செய்யவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் சுத்தமான குடிநீர் வழங்கப்படாமையால் அதிகளவிலான மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பதவிசிறிபுர பகுதியில் அதிகளவிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீரை வழங்க உள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
27 minute ago
30 minute ago
41 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
30 minute ago
41 minute ago
45 minute ago