Editorial / 2021 டிசெம்பர் 20 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்
குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவுக்கு பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான இலவச பஸ் சேவை, இன்று (20) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறிஞ்சாக்கேணி பால புனரமைப்பு வேலைகள் நிறைவடையும்வரை இந்த பஸ் சேவையை வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுக்கவுள்ளது.
குறிஞ்சாக்கேணி பாதுகாப்பற்ற இழுவைப் படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 08 பேர், கடந்த மாதம் உயிரிழந்தனர்.
இதனால் குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவுக்கு பாடசாலை செல்வதற்கு மாணவர்கள் படகு சேவையில் பயணிப்பதற்கு அச்சம் கொண்டிருந்த நிலையில் இந்த இலவச பஸ் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
எனினும், குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவுக்கான படகு சேவை கடற்படையினரால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
53 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
5 hours ago