2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

குறிஞ்சாக்கேணி விபத்து; கைதாகியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2021 டிசெம்பர் 09 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கீத்

கடந்த நவம்பர் 23ஆம் திகதி இடம்பெற்ற கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதை கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட மூவரின் விளக்கமறியலும், எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை, திருகோணமலை நீதவான் நீதிபதி ஜனாப் இஸ்மாயில் பயாஸ் ரெஸ்ஸாக், நேற்று (08) விடுத்துள்ளார்.

குறிஞ்சாக்கேணி ஆற்றைக் கடப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட படகுப் பாதையின் உரிமையாளர், ஓட்டுநுர், உதவியாளர் ஆகியோர்களுக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தப் படகுப் பாதைக்கு அனுமதி வழங்கிய கிண்ணியா நகர பிதா தொடர்பான வழக்கு, நீதவான் நீதிமன்றத்தில் இன்று (09) எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X