Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2021 நவம்பர் 25 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
“குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்துச் சம்பவத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்” எனத் தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், “பொறுப்பில் இருந்து யாரும் தப்ப முடியாது” என்றார்.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் தற்போது செயற்படும் அனைத்துப் பாலங்களின் தரம் குறித்து ஆராய விசேட குழுவொன்று அனுப்பி வைக்கப்படுமெனவும் ஆளுநர் தெரிவித்தார்.
பொலிஸ், மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியல் பிரிவு மற்றும் கடற்படையினரால் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு விபத்தின் போது பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்ப்பதற்காக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு இன்று (25) சென்ற போதே, ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு கருத்துரைத்த ஆளுநர், “இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நாம் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும். ஒருவரையொருவர் நோக்கி விரல் நீட்டும் நேரம் இதுவல்ல.
“இந்தச் சம்பவம் தொடர்பில் நாங்கள் இப்போது விசாரித்து வருகின்றோம். விசாரணை அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
9 hours ago