Janu / 2024 ஏப்ரல் 03 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை , ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (02) பதிவாகியுள்ளது .
ஈச்சிலம்பற்று , இலங்கைத்துறை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தம்பிராசா ராசா (வயது35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முன் பகையொன்றை தீர்ப்பதற்காக குறித்த நபரின் வீட்டுக்குச் சென்ற சிலரே இவ்வாறு
கூரிய ஆயுதங்களால் தாக்குதலை மேற்கொண்டு , கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது .
மேலும் , சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
தீஷான் அஹமட்


15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025