Editorial / 2017 டிசெம்பர் 09 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், அப்துல் சலாம் யாசீம்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா புஹாரியடி சந்தியில் மோட்டார் சைக்கிளில் வைத்து கேரளா கஞ்சா கொண்டு வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 வயது இளம் குடும்பஸ்தாரான இவரிடமிருந்து 10 கிராம் கேரளாக் கஞ்சாவையும் அதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட நபரையும் கேரள கஞ்சாவையும், அவருடைய மோட்டார் சைக்கிளையும் மேலதிக விசாரணைக்காக, கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோஜன் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பில், கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
34 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago