எப். முபாரக் / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 500 மில்லிகிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த நபரொருவரை, இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதமன்ற பதில் நீதவான் சானிக்கா பெரேரா, இன்று (18) உத்தரவிட்டார் .
ஜயந்திபுர, வான்எல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
சந்தேகநபர், வான்எல பகுதியில் கேரளா கஞ்சா விற்பனை செய்து வருவதாக கந்தளாய் குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (17) கைதுசெய்யப்பட்டாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சாந்தேகநபரை, பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற பதில் நீதவான்
முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
10 minute ago
11 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
1 hours ago