2025 மே 14, புதன்கிழமை

கைகலப்பில் மூவர் காயம்

Suganthini Ratnam   / 2017 ஜூலை 09 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எப்.முபாரக்

திருகோணமலை, அக்போபுரப் பகுதியில்  இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் படுகாயமடைந்த மூவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என,   பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் கூறினர்.                       

கந்தளாய் மற்றும் ஹபரணப் பகுதிகளைச் சேர்ந்த 28, 32, 34 வயதுகளையுடைய மூவரே காயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் சனிக்கிழமை (8) நடைபெற்ற  திருமண வைபவத்தின்போது  மணமகன், மணமகள் வீட்டார்களைச் சேர்ந்த இளைஞர்கள் இருவருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .