2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கைக்குண்டு, வாளுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 31 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ. எம்.கீத்

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவா நகர் பிரதேசத்தில் பாதாள உலகக் கோஷ்டியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவரை, நேற்றிரவு (30) கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவரிடம்  இருந்து கைக்குண்டு ஒன்றும் மூன்றரை அடி நீளமாள வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

தேவா நகர் பிரதேசத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற வன்புனர்வுச் சம்பவம் மற்றும் அப்பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறு குற்றச்செயல்களுடன் மேற்படி நபர் தொடர்பு பட்டவர் என்றும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X